வங்கதேசத்துடன் பகல்-இரவு டெஸ்ட்: மின் விளக்குகளுக்கு மத்தியில் பிங்க் பந்தில் பயிற்சி செய்த இந்திய வீரர்கள் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணி முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியுடன் மோதவுள்ளதால், இந்திய அணி வீர்கள் மின் விளக்குகளுக்கு மத்தியில் பயிற்சி செய்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி அங்கு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடர் முடிவு பெற்று, டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் வங்கதேச அணி தோல்வியை சந்தித்த நிலையில், இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ஆம் திகதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

இந்தியா முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதால், ரசிகர்களுடைய மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இதற்கிடையில் இந்திய வீரர்கள் மின் விளக்குகளுக்கு மத்தியில் பிங்க் நிற பந்தில் பயிற்சியில் ஈடுபடுவதை பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த பயிற்சியில் ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சாளர் மொகமத் ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் பங்கேற்கவில்லை, அதே சமயம் முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால், விக்கெட் கீப்பர் விரித்திமன் சஹாவும் பயிற்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்