ஐபிஎல் ஏலத்தில் சென்னை வாங்க நினைத்த வீரரை கோடிக்கணக்கில் எடுத்த மும்பை! அனல் பறந்த போட்டி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது அவுஸ்திரேலியா வீரரை எடுப்பதற்காக சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டியே நிலவியது.

அடுத்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு ஏலம் கடந்த 19-ஆம் திகதி துவங்கியது. இதையடுத்து நேற்று துவங்கிய இந்த ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவை சென்னை அணி 6 கோடிக்கு மேல் எடுத்தது.

இதனால் சென்னை ரசிகர்கள் என்னடா? இது தேவையில்லாமா? இவருக்கு இவளோ காசா என்று டுவிட்டரில் கதறி வருகின்றனர். அதற்கு அணி நிர்வாகமோ சாவ்லாவை எடுப்பதற்கு முக்கிய காரணமே டோனி தான் என்று தெரிவித்தது.

இந்நிலையில் இந்த ஏலத்தின் போது அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான குல்டர் நைலை எடுப்பதற்கு சென்னை அணி மிகுந்த ஆர்வம் காட்டியது, இருப்பினும் மும்பை அணியும் அவரை எடுப்பதில் ஆர்வம் காட்ட, இரு அணிகளுமே ஏலத்தில் போட்டி போட்டு பணத்தை அறிவித்தன.

ஆனால் இறுதியில் மும்பை அணி அவரை 8 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்