மிடில் ஸ்டெம்பை தெறிக்கவிட்ட அவுஸ்திரேலியா வீரர்! கணிப்பதற்குள் அவுட்டாகி வெளியேறிய குயிண்ட டி காக் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணி வீரர் மிட்சல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில், தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக், ஸ்டம்பை பறிகொடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி அங்கு, டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நேற்று முன் தினம் ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 89 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் தலைவரான குயிண்டன் டி காக், முதல் ஓவர் வீசிய மிட்சல் ஸ்டார்க்கின் 2-வது பந்தை எதிர் கொண்டார். அப்போது அவர் பந்தை கணிப்பதற்குள்ளே பந்தானது மிடில் ஸ்டம்பை பறக்கவிட்டது.

இதனால் குயிண்டன் டி காக் என்ன செய்வதென்ற தெரியாமல், அப்படியே பவுலியன் திரும்பினார். நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் டி காக் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நல்ல பார்மில் இருந்தார்.

ஆனால் அவர் இப்படி மிகவும் மோசமான அவுட்டானது தான், தென் ஆப்பிரிக்க ரசிகர்களிடையே வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்