கிரிக்கெட் என்ற பெயரில் ஹார்ட் அட்டாக்! பஞ்சாப் அணி விளையாடும் போது... எச்சரிக்கும் ப்ரீத்தி ஜிந்தா

Report Print Santhan in கிரிக்கெட்

பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா, கிரிக்கெட் என்ற பெயரில் பஞ்சாப் அணியினர் ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பஞ்சாப் அணி 18-வது ஓவரிலே எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால், கெய்லின் தேவையில்லாத ரன் அவுட்டால், போட்டி கடைசி போட்டி வரை சென்றுவிட்டது.

இதனால் இந்த போட்டியை டிவியில் பார்த்த பஞ்சாப் ரசிகர்களுக்கு கடைசி வரை ஜெயிப்போமா? இல்லை தோற்றுவிடுவோமா? என்ற நிலை இருந்தது.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா, ஒரு வழியாக மிகவும் அவசியமான வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.

கிரிக்கெட்டின் பெயரில் எங்கள் அணியினர் மக்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமாறு ஆடக்கூடாது என விரும்புகிறேன்.

பஞ்சாப் சிங்கங்கள் ஆடும் போட்டிகள் பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கானதல்ல என்று எச்சரிக்கிறேன்.

இந்தப் போட்டியில் கடைசி வரை போராடிய பெங்களூரு அணி பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்