புள்ளிப்பட்டியலில் சீறி வரும் கோஹ்லியின் பெங்களூரு! ராஜஸ்தானை துவம்சம் செய்த டிவில்லியர்ஸ்: அபார வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்

ராஜஸ்தான் அணிக்கெதிரான இன்றைய போட்டியில், டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால், பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்று இரண்டு போட்டிகள் என்பதால், முதல் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் கோஹ்லியின் பெங்களூரு அணியும், ஸ்மித்தின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன் படி ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணியின் களமிறங்கினர்.

உத்தப்பா ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ராஜஸ்தான் அணி 5.4 ஓவரில் 50 ஓட்டங்களை எட்டியது.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரரான ஸ்டோக்ஸ் அந்தளவிற்கு ஆட்டத்தை வெளிப்படுத்ததால், 15 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதையடுத்து, 22 பந்துகளை சந்தித்த உத்தப்பா 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 41 ஓட்டங்கள் குவித்து சாஹல் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த சஞ்சுவ் சாம்சங் 9 ஓட்டங்களில் வெளியேற, ராஜஸ்தான் அணி 7.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தடுமாறியது.

அடுத்துவந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

25 பந்துகளை சந்தித்த பட்லர் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்து வீச்சில் வெளியேறினார். 36 பந்துகளை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித் 1 சிக்சர் 6 பவுண்டரிகள் உள்பட 57 ஓட்டங்கள் குவித்து மோரிஸ் பந்தில் வெளியேறினார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 177 ஓட்டங்களை குவித்தது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக, ஸ்டீவ் ஸ்மித் 57 ஓட்டங்களும், ராபின் உத்தப்பா 41 ஓட்டங்களும் குவித்தனர்.

பெங்களூர் தரப்பில் அந்த அணியின் கிரிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர்.

இதில் ஆரோன் பின்ச் 14 ஓட்டங்களில் வெளியேறினார். அதன் பின் வந்த கோஹ்லியுடன் சேர்ந்த படிக்கல், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், படிக்கல் 35 ஓட்டங்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து நான்காவது வீரராக களமிறங்கிய டிவில்லியர்ஸ் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை ருத்ரதாண்டவம் ஆடினார்.

இதனால் பெங்களூரு அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் எகிறியது. மறுபுறம் ஆடி வந்த கோஹ்லி, 43 ஓட்டங்களில் வெளியேற, டிவில்லியர்ஸ் ஆட்டட்த்தை முடித்து கொடுத்தார்.

இறுதியாக பெங்களூரு அணி 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் பெங்களூரு அணி 9 போட்டிகளில் 6 வெற்றி என புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்