சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை நட்சத்திர வீரர் ஓய்வு! திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

Report Print Basu in கிரிக்கெட்
0Shares

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து உபுல் தரங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும்’ என்று பழமொழியில் சொல்வது போல, 15 வருடங்களுக்கும் மேலாக விளையாட்டிற்காக அனைத்தையும் அர்பணித்த பிறகு எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெற வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன்.

அன்பான நினைவுகள் மற்றும் சிறந்த நட்புகளுடன் பயணித்த பாதையை நான் விட்டுச் செல்கிறேன்.

என் கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தோசமான மற்றும் மோசமான நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்து பல கிரிக்கெட் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் என குடும்பத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

உங்கள் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஊக்கமளிக்கும் வாழ்த்துக்கள் என் லட்சியத்தின் பின்னால் பயணிக்க உந்துதலாக இருந்தன. அதற்காக நான் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன், நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன்.

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்த விரும்புகிறேன், அணி விரைவில் வலுவாக முன்னேறும் என்று நான் நம்புகிறேன் என உபுல் தரங்கா தெரிவித்துள்ளார்.

உபுல் தரங்கா இதுவரை இலங்கை அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விளையாடி, 3 சதம், 8 அரை சதத்துடன் 1754 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 165 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

235 ஒரு நாள் போட்டியில் விளையாடி, 15 சதம், 37 அரைசதத்துடன் 6951 ஓட்டங்கள் எடுத்துள்ளார், அதிகபட்சமாக ஆட்டமழக்காமல் 174 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

26 டி-20 போட்டிகளில் விளையாடி 407 ஓட்டங்கள் எடுத்துள்ளார். உபுல் தரங்கா கடைசியாக 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் Cape Town மைதானத்தில் நடந்த தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடினார், அப்போட்டியில் அவர் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்