இத்தாலியில் மோட்டார் பந்தயம்! முதலிடம் பிடித்து சாதித்த இலங்கையர்

Report Print Vethu Vethu in புலம்பெயர்

இத்தாலியில் நடைபெற்ற மோட்டார் பந்தய போட்டியில் கலந்து கொண்ட இலங்கையர் ஒருவர் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

இத்தாலி மொன்ஸா நகரத்தில் நேற்று லெம்போகினி சுப்பர் ட்ரோபியோ என்ற மோட்டார் பந்தயம் நடைபெற்றது. இதில் LP CUP பிரிவின் முதல் சுற்றில் இலங்கையின் பிரபல மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

உலகின் பிரபல மோட்டார் பந்தய வீரர்கள் பலர் கலந்து கொண்ட இந்த போட்டியில் டிலந்த மாலகமுவ திறமையை வெளிப்படுத்தி முதல் இடத்தை பிடித்திருப்பது முழு இலங்கைக்கும் பெருமையான விடயமாக கருதப்படுகின்றது.

மோட்டார் பந்தயத்தை பார்வையிடுவதற்கு இத்தாலியில் வசிக்கும் பல இலங்கையர்கள் வருகை தந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இன்றைய தினம் இரண்டாவது மற்றும் இறுதி போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புலம்பெயர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments