கிழக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை: பாடசாலை மாணவர்கள் பாதிப்பு

Report Print Kumar in கல்வி

கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப்பரீட்சை நடைபெற்று வருகின்றதுடன், காலை நேரங்களில் மழை காரணமாக இருள்சூழ்ந்து காணப்படுவதினால் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன், வகுப்பறைகள் இருளடைந்து காட்சியளிப்பதனால் பல பாடசாலைகளில் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே பரீட்சை எழுதி வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், குருமண்வெளி சிவசக்தி வித்தியாலய மாணவர்கள் நேற்றைய தினம் மெழுகுவர்த்தி ஒளியில் பரீட்சை எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்