காட்டிற்குள் நடிகைக்கு நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற கார் ஓட்டுநரிடம் தப்பித்தது குறித்து இளம் நடிகை வெளிப்படையாக கூறியுள்ளார்.

ரேஷ்மி கவுதம் என்ற இளம் நடிகை, தமிழில் கண்டேன், மாப்பிள்ளை விநாயகர், பிரியமுடன் பிரியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் கார் ஓட்டுநர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது அவரிடம் இருந்து தப்பியது குறித்து கூறியுள்ளார்.

ஆந்திராவின் கர்னூல் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, இரவு நேரம் என்பதால் தூங்கிவிட்டேன். அப்போது கார் ஓட்டுநர் காட்டுக்குள் காரை ஓட்டிச்சென்றார்.

கண்விழித்த நான் எதற்காக இப்படி காட்டுக்குள் காரை ஓட்டிச்செல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் குறுக்குவழியில் செல்கிறேன் என கூறினார்.

அதன்பின்னர் சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தி, என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.

ஆனால், எனது முழு பலத்தையும் காட்டி கார் ஓட்டுநரை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து தப்பி ஓடினேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments