கந்துவட்டி அன்புச்செழியன் நடிகர் அஜித்தையும் மிரட்டினார்: வெளியான தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
272Shares
272Shares
lankasrimarket.com

கந்துவட்டி பிரச்சனையால் நடிகர் அஜித்குமாரும் முன்னர் பாதிக்கப்பட்டதாக இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் கடன் தொல்லையால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது தற்கொலைக்கு காரணம் மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியன் தான் என அசோக்குமார் இறப்பதற்கு முன்னர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

கந்துவட்டி கடன் கொடுமையால் அசோக்குமார் உயிரிழந்த நிலையில், இதே போன்ற ஒரு இக்கட்டான நிலைக்கு பிரபல நடிகர் அஜித்குமாரும் தள்ளப்பட்டதாக இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், மதுரை அன்புச்செழியனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நான் கடவுள் திரைப்பட சமயத்தில் நடிகர் அஜித்குமாரும் இது போன்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார், இதை அவர் நிச்சயம் மறுக்க மாட்டார்.

இது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கலாம், அதே போல இயக்குனர் லிங்குசாமியும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்