பிரபல தொலைக்காட்சி நடிகை தீக்குளித்து தற்கொலை

Report Print Kabilan in பொழுதுபோக்கு
630Shares
630Shares
lankasrimarket.com

கேரளாவில் தொலைக்காட்சி நடிகை ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கவிதா(35), மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவருக்கு திருமணமாகி, 4 வயதில் மகள் உள்ளார்.

தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்துள்ளார் கவிதா.

மலப்புரம் மாவட்டம் நீலாம்பூரில் வசித்து வந்த கவிதா, பள்ளி விடுமுறை என்பதால் தனது மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கவிதா கடந்த ஞாயிறன்று, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெங்களூரில் அழகு நிலையம் துவங்க வேண்டும் என்று நினைத்த கவிதா, அதற்காக பணம் சேர்த்து வந்துள்ளார், போதிய பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கவிதாவின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்