புற்றுநோயுடன் போராடும் பிரபல தமிழ் பட நடிகை: தைரியமாக வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் ஆதரவு!

Report Print Kabilan in பொழுதுபோக்கு
1188Shares
1188Shares
ibctamil.com

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பிந்த்ரே வெளியிட்ட புகைப்படத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது.

ஹிந்தி நடிகை சோனாலி பிந்த்ரே, தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்து புகழ்பெற்றவர். ஆனால், புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது அதற்கான சிகிச்சையை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், தான் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தையும், புற்றுநோயை எதிர்கொண்டு வருவது குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனாலி பிந்த்ரே வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘எனக்கு தெரியும், நான் பயத்தை அனுமதித்தால் அது என்னை முந்திச் சென்றுவிடும். அதனால் என் பயணம் சோர்ந்துவிடும். பயம் என்பது என்னை ஆட்கொண்டுவிடும் என்பதால், நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதாக முடிவு செய்துகொண்டேன்.

கடந்த சில மாதங்களில் நான் சிறந்த நாட்களையும், மோசமான நாட்களையும் சந்தித்தேன். அந்த நாட்களில் மிகவும் களைப்பாக இருந்தேன். என் விரலில் மிகுந்த வலி இருப்பதை உணர்ந்தேன்.

உடல் ரீதியான வலியானது, மனம் மற்றும் உணர்ச்சிகரமான வலிகளுக்கும் வழிவகுக்கும். ஒவ்வொரு நிமிடமும் என்னுடனே நான் போராடுகிறேன். என்னை அழுவதற்கும், வலியை உணர்வதற்கும், சுய பரிதாபத்திற்கு ஈடுபடுவதற்கும் அனுமதித்தேன்.

நீங்கள் மட்டுமே எதை நோக்கி செல்கிறீர்கள் என்பதை அறிவீர்கள் மற்றும் அது சரி என ஏற்றுக் கொள்வீர்கள். உணர்வுகள் தவறானவை அல்ல, எதிர்மறையாக உணர்வதும் தவறானவை அல்ல.

ஆனால், ஒரு கட்டத்தில் அதனை கண்டறிய வேண்டும் மற்றும் அதனை மறுத்து உங்கள் வாழ்வை அது கட்டுப்படுத்துவதை தடுக்க வேண்டும்’ என நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

இதனைக் கண்ட பலர் சோனாலி பிந்த்ரே விரைவில் குணம்பெற வேண்டும் என்றும், தைரியமாக நோயில் போராடுகிறீர்கள் என்றும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்