நடிகை கோவை சரளா உடல்நிலை சீரியஸா? சிகிச்சைக்கு வெளிநாடா? அவரே அளித்த பதில்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகை கோவை சரளா உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை மறுத்துள்ள அவர் தான் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது.

இது குறித்து அவர் கூறுகையில், என் உடல்நிலை பற்றி பலமுறை வதந்திகள் வெளியாகியிருக்கு. ஆரம்பத்தில் இந்த மாதிரியான வதந்திகள் வருத்தத்தை கொடுக்கும். பின்னர் அதுக்காக வருத்தப்படறதில்லை.

நான் சிகிச்சைக்காக வெளிநாடு போயிருக்கிறதாக தகவல் பரப்பியிருக்காங்க.

நான் சீரியஸா இருக்கிறதாகவும், யாருமே ஆதரவுக்கு இல்லைனும் தகவல் பரப்பியிருக்காங்க. இப்படிப் பொய்யான செய்தியைச் சொல்றது, உயிரோடு உள்ளவரை கொலைச் செய்யறதுக்குச் சமம்.

சோஷியல் மீடியா யுகத்தில், ஒரு செய்தியை உடனே மத்தவங்களுக்கு பகிரமுடியுது. அதற்காக, நமக்கு வரும் செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்திக்காமலே ஷேர் பண்றது சரியா?

என் உடல்நிலை நன்றாக இருக்கு. நான் ஆக்டிவா இருக்கிறேன் தவறான உறுதிப்படுத்தாதச் செய்திகளைப் பகிராதீர்கள் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்