தூக்கில் தொங்கிய நடிகை யாஷிகா! வீட்டில் சிக்கிய முக்கிய டைரி- என்ன எழுதியிருந்தது?

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை யாஷிகாவின் வீட்டில் பொலிசார் ஆய்வு நடத்திய போது அவரது வீட்டில் பொலிசார் அவர் எழுதியிருந்த டைரி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

திருப்பூரைச் சேர்ந்த 21 வயதான யாஷிகா, சென்னை பெரவள்ளூர் பகுதியில் வசித்து வந்தார்.

இவர் நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா என்ற படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார்.

யாசிகாவுக்கும் பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்ற மோகன்பாபு (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கடந்த 4 மாதங்களாக கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாசிகாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மோகன்பாபு கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையடைந்த யாசிகா, தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன் தாய்க்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியது குறித்த செய்தி வெளியாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது யாஷிகா தங்கியிருந்த வீட்டை பொலிசார் மேற்கொண்ட சோதனையில், அவர் எழுதிய டைரி ஒன்று கிடைத்துள்ளது.

அதில் யாஷிகா, என்னை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டிக்கிறாய், என்னை ஏன் டார்ச்சர் பண்ணுகிறாய், உன்னை நம்பிதானே நான் வந்தேன். நீ ஏன் என்னை வாழ விடவில்லை என்று கருப்பு மையில் எழுதியுள்ளார்.

இதனால் அவரின் தற்கொலைக்கு காரணம் காதலன் தானா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து யாஷிகாவின் அம்மா எஸ்தருக்கு உதவிய வழக்கறிஞர் தமிழ்வேந்தன் கூறுகையில், துணை நடிகை யாஷிகா தற்கொலையில் சில உண்மைகள் மறைந்திருக்கின்றன.

அதாவது, சினிமாவில் கைநிறைய சம்பாதித்தப் பணத்தில் யாஷிகாவுடன் அந்த வாலிபர் சந்தோஷமாக வாழ்ந்துள்ளார்.

அந்த டைரியில் அப்படி எழுதியிருப்பதை பார்க்கும் போது, அவருடைய தற்கொலைக்கு அது முக்கிய காரணமாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது, துணை நடிகை யாஷிகாவுடன் தங்கியிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி அவரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்