ஒவ்வொரு ஆண்டும் மகளுக்கு கன்னித்தன்மை சோதனை: பிரபல பாடகர் ஹாரிஸ் பேச்சால் சர்ச்சை

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

அமெரிக்காவில் பிரபலமான இசைக்கலைஞரும் பாடகருமான டி.ஐ தமது மகளை ஒவ்வொரு ஆண்டும் கன்னித்தன்மை சோதனைக்கு உட்படுத்துவேன் என வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பிரபலமான ராப் இசைக்கலைஞர்களில் டி.ஐ என அறியப்படும் கிளிஃபோர்ட் ஜோசப் ஹாரிஸ் என்பவரும் ஒருவர்.

சமீபத்தில் இவர் பெண்களுக்கான இணையதளம் ஒன்றிற்கு அளித்த நேர்முகத்தில் தமது மகள் குறித்து தெரிவித்த கருத்துகள், அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபலமான பல பாடல்களை பாடியுள்ள ஹாரிஸ், தமது 18 வயதான மகளை ஒவ்வொரு ஆண்டும் கன்னித்தன்மை சோதனைக்கு உட்படுத்துவதாக வெளிப்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி, பாலியல் தொடர்பான விவாதங்களிலும் தமது மகளுடன் ஈடுபடுவதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Credit: Getty - Contributor

ஹாரிஸ் கூறிய இந்த கருத்துகள் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவருக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், அது நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்ல அவர் பொய் கூறுவதாக கருதியுள்ளார்.

ஆனால், ஹாரிஸ் மேலும் விளக்கமாக வெளிப்படுத்திய பின்னரே அவர் கூறுவது உண்மை என தெரியவந்தது என அந்த நிகழ்ச்சியை நடத்திய Nazanin Mandi மற்றும் Nadia Moham ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமது மகளின் 16-வது வயது முதல் இதை தாம் கடைப்பிடித்து வருவதாகவும், தமது பிள்ளைகள் தானாகவே சீரழிவதை எந்த உண்மையான பெற்றோரும் அனுமதிப்பதில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

Credit: Instagram

மகளின் 16-வது பிறந்தநாள் இரவு, கொண்டாட்டங்கள் முடிவடைந்த பின்னர் தாம் மகளிடம், அடுத்த நாள் கன்னித்தன்மை சோதனைக்கு மருத்துவரை காண செல்ல வேண்டும் தயாராக இரு என கூறியதாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹாரிஸின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பும் ஆதரவும் குவிந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தனிமனித சுதந்திரத்தை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என ஆலோசனை வழங்கியுள்ளனர்.

39 வயதான ஹாரிஸிக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். இதில் 18 வயதான Deyjah Harris என்பவருக்கே ஆண்டு தோறும் கன்னித்தன்மை சோதனை மேற்கொள்வதாக ஹாரிஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

Credit: Getty - Contributor

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்