மரத்தில் சடலமாக தொங்கிய பிரபல தமிழ் திரைப்பட நடிகையின் மகன்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சென்னையில் பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் வெங்கடேஷ் மரத்தில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60களின் இறுதிகளிலும், 70-களிலும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் வாணிஸ்ரீ.

டாக்டர் கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட வாணிஸ்ரீக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திகுக்கு (36) கல்யாணமாகி 4 வயதில் ஒரு மகனும், 8 மாசத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இவரது மனைவி ஒரு மருத்துவர். ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியை. இவர் மனைவி, குழந்தைகளுடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

தற்போது லாக்டவுன் என்பதால், நுங்கம்பாக்கம் வீட்டுக்கு போகாமல், திருக்கழுக்குன்றம் வீட்டிலேயே கார்த்திக் தங்கியுள்ளார். சில நாட்களாக மன உளைச்சலிலும் இருந்துள்ளார்.

இந்த சமயத்தில் தான் வீட்டுக்கு பின்னால் இருந்த மரத்தில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார் வெங்கடேஷ்.

இவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா என தெரியவில்லை. அவர் உடலை பொலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சில மாதத்துக்கு முன்பு குடும்பத்தில் சொத்து தகராறும் வந்து போயுள்ளது. அது சம்பந்தமாக கூட மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக சொல்கிறார்கள்.

தொடர்ந்து இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்