நானே அதை சொல்வேன்! தன்னைப் பற்றி வெளியான செய்திக்கு வனிதா தெளிவான விளக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
849Shares

வனிதா விஜயக்குமார் பாஜக-வில் இணையவுள்ளதாக செய்தி வெளியான நிலையில், அது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

பிக்பாஸ் பிரபலமான வனிதா விஜயக்குமார், மூன்றாவது கணவரான பீட்டர் பாலை சமீபத்தில் பிரிந்தார். இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக வனிதா பாஜக-வில் சேர இருப்பதாக செய்தி வெளியானது.

நடிகை குஷ்பு பாஜகவை சேர்ந்த நிலையில், வனிதா பாஜகவில் சேரவுள்ளாராம். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இருப்பினும் பாஜக திரைப்பிரபலங்கள் பலரையும் தங்கள் பக்கம் இழுத்து வருவதால், இது உண்மையாக கூட இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து வனிதா கூறுகையில், பாஜகவில் இணைவதாக இருந்தால் நானே அறிவிப்பேன். தற்போது அதுபற்றி எதுவும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கஸ்தூரி சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், வனிதா மேடம் சேர விருப்பம் தெரிவித்தாராம். கட்சி மேலிடம் எந்த முடிவும் சொல்லவில்லையாம். அவர்கள் விளக்கத்தை அப்படியே உங்களுக்கு தெரிவித்துவிட்டேன். நன்றி என்று குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்