கனடாவில் உயிரிழந்த லாஸ்லியா தந்தை! உடலை இலங்கைக்கு கொண்டு வர உதவுங்கள்.. எழுந்துள்ள உருக்கமான கோரிக்கை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
9134Shares

கனடாவில் உயிரிழந்த லாஸ்லியாவின் தந்தை உடலை இலங்கைக்கு கொண்டு வர உதவ பல்வேறு தரப்பினரும் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈழப்பெண்ணான பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்று கனடாவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மறைந்த மரியநேசனின் சடலத்தை சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு வர உதவ வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதன்படி இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே மற்றும் வெளியுறவு அமைச்சகத்துக்கு டுவிட்டரில் டேக் செய்து ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கோரி வருகின்றனர்.

அதே போல கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குக்கும் பலரும் டேக் செய்து இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

You May Like This

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்