பிக்பாஸில் எடுத்த 5 லட்சம் ரூபாயை என்ன செய்யபோகிறேன்? வெளிப்படைய கமலிடம் கூறிய கேப்ரில்லா

Report Print Santhan in பொழுதுபோக்கு
1582Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று இறுதிநாளை எட்டியுள்ள நிலையில், 5 லட்சம் ரூபாயை எடுத்துவிட்டு வெளியில் சென்ற போட்டியாளர் கேபி அதை ஏன் எடுத்தேன், அந்த பணத்தை என்ன செய்யப்போகிறேன் என்பது குறித்து கமலிடம் கூறினார்.

தமிழில் இப்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி இன்று இறுதிநாளை எட்டியுள்ளது. ஆரி அர்ஜுனன், பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் மற்றும் சோமசேகர் என 5 போட்டியாளர்களில் ஒருவர் தான் இன்று பிக்பாஸ் 4 சீசனின் வெற்றியாளர் ஆகவுள்ளார்.

இந்நிலையில், இந்த வாரத்தில் சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து வெளியேற நினைப்பவர்கள் அதை எடுத்துக் கொண்டு வெளியேறலாம் என்று கூறப்பட்டது.

அப்போது போட்டியாளர்களில் ஒருவரான கேபிரியல்லா, அந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.

இதையடுத்து நேற்று கமல் எபிசோடில் அழகாக சேலையில் வந்த கேப்ரில்லா, அந்த பணத்தை எடுத்தற்கான காரணம் குறித்து கூறுகையில், கடந்த வாரமே பெட்டி வரும் என்று சொன்னார்கள்.

வந்திருந்தால் கண்டிப்பா எடுத்திருக்க மாட்டேன். இறுதி வாரத்துக்கு வந்துட்டோம், திடீர்னு பணப்பெட்டி வந்த உடனே உள் மனசுல எடுத்துடு கேபின்னு சொன்னதால், உடனே எடுத்துவிட்டேன்.

அதை ஏன் எடுத்தேன் என்பது இப்போது வரை தெரியவில்லை, ஆனால், அந்த பணத்தை வைத்து குடும்பத்தினருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதால், உடனே எடுத்துக் கொண்டேன் என்று தெரிவித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்