என் உழைப்பு மேல் நம்பிக்கை இருக்கு! 10வருடங்களில் ஆடம்பரமான காரில் வந்து இறங்குவேன்.. என்றவரின் இன்றைய நிலை?

Report Print Abisha in தொழிலதிபர்

இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனம் என்று பெயர் பெற்ற வசந்து ஆன் கோ நிறுவனம் துவங்கப்பட்ட கதை...

நாகர்கோவில் அருகில் உள்ள அகத்தீஸ்வரம் என்ற கிராமத்தில் பிறந்தவர் வசந்தகுமார். பெரிய அளவில் பொருளாதார பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்த வசந்தகுமாரால், தந்தையின் உழைப்பால் பட்டபடிப்பை மட்டும் முடிக்க முடிந்தது.

அதன் பின் சில சிறு வேலைகள் மட்டும் செய்து தனது பட்ட மேற்படிப்பை முடித்தார் ஹெச்.வசந்தகுமார்.

படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி சென்னை வந்த வசந்தகுமாருக்கு எங்கையும் வேலை கிடைக்கவில்லை. பசி பட்டினி என்று நாட்கள் உருடோடின. ஆனால், விடா முயற்சியாக இறுதியில் விஜிபி லிமிடெட்டில் வேலைக்காக சேர்ந்தார்.

அங்கு கடிகாரங்களை துடைக்கும் வேலையை தான் முதலில் ஆரம்பித்தார் வசந்தகுமார். 8ஆண்டுகள் அயராத உழைப்பால், அந்த கடையில் விற்பனையாளராக, மேனேஜராக, கடை பொறுப்பாளராக படிப்படியாக முன்னேறினார் அவர்.

அந்த காலத்தில் அவருக்கு நடிப்பிலும் மிக ஆர்வம் இருந்ததால், “வாஞ்சி நாதன் ஸ்டேஜ்“ என்ற குழு ஆரம்பித்து பல்வேறு நாடகங்களை அரகேற்றினார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால், அரசியல் ஈடுபாடு ஏற்பட்டு வாழ்க்கையில் திருப்பதை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இனி யாருடனும் வேலை செய்ய போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார் ஹெச்.வசந்தகுமார்.

எனவே தான் செய்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தான் வாழ்ந்த சொகுசு அறையை காலி செய்து ஆற்றோர குடிசைக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

ஒரு வேளை உணவு, பலரது அறிவுரைகள் என்று சில நாட்கள் உருடோடியுள்ளது. அப்போது எல்லாம் வசந்தகுமார், எப்படியாவது ஜெய்க்க வேண்டும் என்று மட்டும் தனது மனதில் நிறுத்தி கொண்டுள்ளார்.

உழைக்க தயாராக இருந்த அவருக்க நண்பர் ஒருவர் கடையை ஆறு மாதத்திற்கு தந்துள்ளார். அப்போது பலரும் இது ராசி இல்லாத கடை. இங்கு ஆரம்பித்தால் வியாபாரம் செழிக்காது என்று எல்லாம் கூறியுள்ளனர். ஆனால், வசந்தகுமார் அவர்களிடம் எல்லாம் என் உழைப்பின் மேல் நம்பிக்கை உள்ளது. 10 வருடங்களில் இந்த தொருவில் ஆடம்பர காரில் வந்து இறங்குவேன் என்று பதிலளித்துள்ளார்.

அவரது முயற்சியால், 16.07.1978 ஆம் ஆண்டு வசந்த் & கோ உருவாகியுள்ளது. வெயர் சேயர் முதலில் விற்க தொடங்கிய வசந்தகுமார். தொடர்ந்து அதில், சீட்டு கட்டுவது, வாங்குவது விற்பது என்று அனைத்தையும் அவரே தனியாக கவனித்து கொண்டுள்ளார்.

முதலில், அவரிடம் ஒரு நபர் 22ரூபாய் கொடுத்து சீட்டு போட்டுள்ளார். அது தான் அவரது முதல் வெற்றி பயணம். தொடர்ந்து பீரோ, கட்டில், டிவி என்று வீட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தவணை முறையில் விற்க தொடங்கினார். அதில், வங்கிகளில் லோன் பெற்றுக் கொண்டும் பல தவணை சாம்ராஜித்தை திட்டமிட்டு விரிவுபடுத்தினார்.

ஒரு தனி மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற விடாமுற்சி அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய முழுவதும் வளர்ந்து விஷ்வரூபம் எடுத்தது.

தற்போது வாடிக்கையார்களுக்கு தேவையான வித்தியாசமான தவணை முறைகள். நடுத்தர குடும்பங்கள் சூழும் இடத்தில், புதுபுது தவணைமுறைகள் அறிமுகப்படுத்துவது என்று மேலோக்கி வளர்ந்து நிற்கிறார் ஹெ.வசந்தகுமார்.

இந்த வெற்றி பயணம் குறித்து பேசியுள்ள ஹெச்.வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி, இந்த சாதனை தொடர வேண்டும் என்றால் நீ சில தியாகங்கள் செய்ய வேண்டும். விட்டுக்கொடுக்க வேண்டும் என்று குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கும் போதே தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியலில் நிச்சயம் கால்பதிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைபட்டதாகவும், தற்போது அதன்படி எம்.பியாக மாறியதாக கூறியுள்ளார்.

ஆரம்பத்தில், 22 ரூபாயில் தொடங்கப்பட்ட தவணை முறை, தற்போது 1000கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர்ந்து நிற்க காரணம் ஹெச்.வசந்தகுமார் என்று தனி மனிதனின் விடாமுயற்சி மட்டுமே ...

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்