சாதரண நபரும் கோடீஸ்வரன் ஆக அம்பானி கொடுத்த அருமையான வாய்ப்பு! இதை பயன்படுத்தி கொண்டீர்களா?

Report Print Santhan in தொழிலதிபர்

கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இல்லாமல் இருக்கும். பணம் இருந்தால் போதும், பாதி பிரச்சனை எனக்கு தீர்ந்துவிடும் பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம்.

ஒரு சிலர் பணம் வைத்துக் கொண்டு அதை எப்படி முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பது என்று தெரியாமல் தவித்து வருபவர்.

அப்படி பணம் சம்பாதிப்பதற்கு உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி நமக்கு கொடுத்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தினீர்களா? என்னது அம்பானி இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தாரா என்று பலரும் யோசிக்கலாம்.

ஆனால் சாதாரண மக்களும் கோடீஸ்வரர் ஆகும் வகையில், அம்பானி வாய்ப்பு கொடுத்தார். அது என்ன வாய்ப்பு என்பது தெரியுமா? அதைப் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள், கடந்த 19-ஆம் திகதி அன்று தன் வாழ்நாள் உச்சமாக 1,788 ரூபாயைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

இந்திய பங்குச் சந்தையில் முதல் முறையாக, ஒரு பங்கின் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயைத் தொடுவது இதுவே முதல் முறை.

இப்படி பல விஷயங்களைச் செய்திருக்கும் ரிலையன்ஸ் பங்கு தான் நமக்கு கோடீஸ்வரனாக வாய்ப்பு கொடுத்து இருக்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன பங்குகள் குறித்து பின்னோக்கிப் போனால், அது நமக்கு தெரியும்.

கடந்த ஜூலை 05, 2002 அன்று, ஒரு பங்கு விலை 53 ரூபாய் வீதம் 5,850 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை சுமாராக 3,10,050 ரூபாய்க்கு வாங்கி இருந்தால் இன்று நாமும் ஒரு கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம்.

5,850 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை 53 ரூபாய்க்கு, ஜூலை 2002-ல் வாங்குகிறோம் என்றால், சுமாராக 3,10,050 ரூபாய் செலவாகி இருக்கும்.

அதை 1,765 ரூபாய்க்கு 19 ஜூன் 2020 அன்று விற்று இருந்தால், இன்று நம் கையில் 1 கோடி ரூபாய் இருந்து இருக்கும். இது 3,230 சதவிகிதம் லாபம்.

கடந்த 2008-ஆம் ஆண்டு உல பொருளாதாரமே நிதிப் பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. இதனால், இந்தியாவில் பெரும்பாலான பங்கு விலை சரிந்தன. அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளும் ஒன்று.

2008-ஆம் ஆண்டு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 780 ரூபாய் என ஒரு பெரிய உச்சத்தைத் தொட்டது. அடுத்த சில வாரங்களில் 255 ரூபாயைத் தொட்டது. அப்போது வாங்கி இருந்தால் கூட 1,765 ரூபாய்க்கு விற்று 592 சதவீதம் லாபம் பார்த்து இருக்கலாம்.

மீண்டும் 15 மே 2012-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு இறக்கத்தைத் தொட்டது. அப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை, 338 ரூபாயைத் தொட்டது. அப்போது வாங்கி, 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட நாம் 422 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.

மீண்டும் சில பல காரணங்களால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை, கடந்த 30 மார்ச் 2015 அன்று 405 ரூபாய்க்கு வந்தது.

அன்று வாங்கி, இருந்தால், 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் 335 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். ஆனால் இதை நாம் கவனித்திருக்கமாட்டோம்.

இந்த வாய்ப்புகள் அனைத்தையும் கூட நாம் பயன்படுத்த தவறினால், கூட ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் நமக்கு ஒரு அருமையான வாய்ப்பு கொடுத்தது. அது என்னவென்றால் ஜியோ என்ற ஒன்று தான், தன்னை ஒரு டெலிகாம் நிறுவனமாக மாற்றிக் கொண்ட காலம்.

ஜியோ தொடங்கப்பட்ட அடுத்த நாள், செப்டம்பர் 06, 2019 அன்று கண்ணை மூடிக் கொண்டு 510 ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கிப் போட்டு இருக்கலாம். அதை 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் 246 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.

கடந்த 30 மார்ச் 2017-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை 634-க்கு வந்தது. அப்போது பங்குகளை வாங்கி 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட 178 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.

இந்த லாபத்திற்கு நாம் வருடக்கணக்கிற்கு காத்துக் கொண்டிருக்கும் போது, மாதக் கணக்கிலும் லாபம் பார்ப்பதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது.

கடந்த 01 ஜனவரி 2019 அன்று வந்த விலைக்கு சுமாராக 1,121 ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கி இருந்தால் இப்போது 57 சதவீதம் லாபம்.

அதே போல கடந்த 08 ஆகஸ்ட் 2019-ல் 1,151 ரூபாய்க்கு வாங்கி இருந்தால் 53 சதவீதம் லாபம். அவ்வளவு ஏன் கடந்த செப்டம்பர் 19, 2019 அன்று 1,178 ரூபாய்க்கு வாங்கி 1,765-க்கு விற்று இருந்தால் கூட 49 சதவீதம் லாபம் பார்த்து இருக்கலாம்.

இப்படி ரிலையன்ஸ் நிறுவனம் கொடுத்த வாய்ப்பை பயனடுத்தாமல் இருந்தால், கவலை வேண்டாம். வ்

இது போல பங்குச் சந்தையில் நல்ல வாய்ப்புகள் அவ்வப் போது வந்து கொண்டே தான் இருக்கும். அதை கண்டு பிடித்து முதலீடு செய்ய வேண்டியது மட்டுமே நம்முடைய புத்திசாலித்தனம்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்