வீட்டில் இருந்தவாறே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்து பாருங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவுகள் மட்டுமின்றி சில உடற்பயிற்சிகளும் உதவி செய்கின்றன.

அந்தவகையில் வீட்டில் இருந்தவாறே கீழே கொடுக்கப்பட்ட உடற்பயிற்சிகளை 20 - 25 நிமிடங்கள் செய்தால் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். அதோடு நேர்மறை எண்ணங்களை தூண்டும் எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரக்கும்.

தற்போது அந்த உடற்பயிற்சிகள் என்னென்ன? அதனை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

ஸ்குவாட் & சைட் லெக் லிஃப்ட் ( squat side leg lift exercise)

ஸ்குவாட் செய்வதால் தசைநார்கள் உறுதியாகும். இடுப்பு, உடல் இலகுத் தன்மை அதிகரிக்கும். வலது கால் தசைகள் வலுபெறும்.

ரிவர்ஸ் லஞ் ( reverse lunge exercise)

Kathryna Hancock

தொடை மற்றும் பின்புறம் அழுத்தம் கொடுக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பைக் கறைக்க உதவும்.

சிட் அப் ( sit up exercise)

வயிற்று தசைகள் இலகுவாகும். ஒட்டுமொத்த உடல் தசைகளும் தூண்டப்பட்டு ஆற்றல் பெறும். தேவையற்ற கொழுப்பு கறையும்.

புஷ் அப் ( Push Up)

pinterest

கை தசைகள், தோள்பட்டைகளை உறுதியாக்கும். இது உடலின் மேல் பகுதி முழுவதையும் வலுப்பெறச் செய்யும்.

பிளாக்ஸ் ( blocks exercises)

இது முதுகுவலியை குணமாக்கும். உடலமைப்பை சீராக்கும். பாதங்களின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

மவுண்டெய்ன் க்ளிம்பர்ஸ் (mountain climbers exercise)

இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதயத்திற்கான இரத்த ஓட்டம் வேகமாகக் கிடைக்கும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்