சுவையான பன்னீர் 65 செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

சைவ உணவுகளில் மிகவும் பிரபல்யாமானது பன்னீர் ஆகும்.

இதில் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது. கார்போஹைட்ரேட் மிகக் குறைவான அளவு உள்ளது.

அந்தவகையில் இதனை கொண்டு சுவையான பன்னீர் 65 எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
  • பன்னீர் - 100 கிராம்
  • மைதாமாவு - 2 மேஜைக்கரண்டி
  • சோளமாவு - 1 மேஜைக்கரண்டி
  • தயிர் - 1 மேஜைக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  • லெமன் சாறு - 1 மேஜைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை

பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், லெமன் ஜூஸ், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

பிறகு பன்னீர் துண்டுகளை டிப் பண்ணி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு பன்னீர் துண்டுகளை போடவும்.

ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். சுவையான பன்னீர் 65 தயார்.

indianhealthyrecipes

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers