ஹாட்ரிக் மற்றும் நூறு கோல் சாதனையை ஒரே போட்டியில் படைத்த வீரர்

Report Print Kabilan in கால்பந்து
77Shares
77Shares
lankasrimarket.com

அத்லெட்டிகோ மாட்ரிட் கால்பந்து அணி வீரர் ஆண்டோனி கிரிஜ்மான், அந்த அணிக்காக 100 கோல்கள் அடித்துள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து லீக் தொடரில், அத்லெட்டிகோ மாட்ரிட் மற்றும் லெகன்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் 26வது நிமிடத்தில், அத்லெட்டிகோ அணியின் கிரிஜ்மான் முதல் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, 35வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் இவரே அடித்தார்.

கிரிஜ்மானின் சிறப்பான ஆட்டத்தினால், அத்லெட்டிகோ அணி முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பின்னர், இரண்டாவது பாதியிலும் கிரிஜ்மானின் ஆதிக்கமே தொடர, 56வது மற்றும் 67வது நிமிடங்களிலும் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.

ஆட்டநேர முடிவில், அத்லெட்டிகோ மாட்ரிட் 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4 கோல்கள் அடித்ததன் மூலம் கிரிஜ்மான், அத்லெட்டிகோ மாட்ரிட் அணிக்காக 100 அடித்து சாதனை படைத்துள்ளார். இவர் இதுவரை 101 கோல்கள் அடித்துள்ளார்.

மேலும், இந்தப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம், லா லிகா தொடரில் தொடர்ந்து 2வது முறையாக ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அத்துடன், அத்லெட்டிகோ அணிக்காக 100 கோல்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையையும் கிரிஜ்மானே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Getty Images

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்