தோல்வி எதிரொலி: பிரேசில் கால்பந்து அணியினர் சென்ற பேருந்து மீது கல்வீச்சு

Report Print Arbin Arbin in கால்பந்து
235Shares
235Shares
lankasrimarket.com

ஃபிபா உலக கிண்ணம் கால்பந்து தொடரில் காலிறுதியில் தோல்வியைத் தழுவி வெளியேறிய பிரேசில் அணியினருக்கு அந்த நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உலக கிண்ணம் கால்பந்து போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி கால்இறுதி ஆட்டத்தில் 1–2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.

இதனால் அந்த நாட்டு ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இந்த நிலையில் பிரேசில் கால்பந்து அணி நாடு திரும்பியது.

விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தனி பேருந்தில் செல்வதை அறிந்த ரசிகர்கள் அந்த பேருந்தை சூழ்ந்து கொண்டு, முட்டை மற்றும் கற்களை வீசி தாக்கினார்கள்.

ரசிகர்களின் ஆக்ரோ‌ஷ தாக்குதல் அதிகமானதை தொடர்ந்து பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரேசில் அணி உலக கிண்ண தொடரில் சொதப்பி வருவதாக குற்றஞ்சாட்டும் ரசிகர்கள், அடுத்தமுறையேனும் கிண்ணத்தை வெல்வார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்