அசாத்தியமான கோல் அடித்து அதிர்ச்சியடைய வைத்த ரூனி: வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in கால்பந்து

முன்னாள் இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் வேய்ன் ரூனி, நேற்று நடைபெற்ற போட்டியின் போது கோல் அடித்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வேய்ன் ரூனி தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் சாக்கர் (MLS) போட்டியில் டிசி யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.

டி.சி யுனைடெட் மற்றும் ஆர்லாண்டோ சிட்டி அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியின் போது, ரூனி அவரது கால்பந்தாட்ட வாழ்க்கையிலே சிறந்ததொரு கோல் அடித்து அனைவரும் ஆச்சர்யப்பட வைத்தார்.

10 வது நிமிடத்தில் டி.சி. யுனைடெட் கேப்டன் ரூனியிடம் பந்து பாஸ் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் ஆர்லாண்டோவின் கோலி பிரையன் ரோ வெளியில் இருப்பதை கவனித்த அவர், பாதி எல்லைக்கோட்டிலிருந்து திடீரென கோல் அடித்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத எதிரணியினர் அதிர்ச்சியடைய, ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ய ஆரம்பித்தனர். இந்த போட்டியில் டிசி யுனைடெட் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ரூனி கோல் அடித்த வீடியோவானது கால்பந்து ரசிகர்களால் அத்தியாகிரம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்