பிரான்சில் 11வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: நீதிமன்ற தீர்ப்பால் கொதித்தெழுந்த மக்கள்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
1134Shares
1134Shares
lankasrimarket.com

பிரான்சில் 11 வயது சிறுமி, தமது ஒப்புதலுடனையே 28 வயது நபருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதிட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் சிறுவர் நல அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

Montmagny பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் இருந்து பாதிக்கப்பட்ட 11 வயதுசிறுமி மாலை மங்கிய நேரம் தமது குடியிருப்புக்கு தனியாக நடந்துசென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது 28 வயது நபர் ஒருவர் குறித்த சிறுமியை அவரது குடியிருப்பு வரை பத்திரமாக சென்று சேரும் வரை பின் தொடர்வதாக உறுதி அளித்துள்ளார். இதனிடையே சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து வந்த அந்த நபர் சிறுமிக்கு முத்தமிடுவது குறித்து கற்றுத்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் குடியிருப்பு அருகே வந்ததும் அவரும் குடியிருப்பினுள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி பயத்தில் உறைந்துபோய்

எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, சிறுமியின் ஒப்புதலுடனே பாலியல் உறவு நடந்துள்ளதாக அந்த நபர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளுக்கு நீதி மறுக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி இந்த விவகாரம் பிரான்ஸ் முழுமையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் குற்றவியல் சட்டத்தில், பாலியல் உறவின்போது அச்சுறுத்தலோ வன்முறையோ இல்லாமல் இருப்பின் அதை புரிந்துணர்வுடன் மேற்கொள்ளும் பாலியல் உறவாக கருதப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்