தீப்பிடித்த அடுக்குமாடி குடியிருப்பு: ஐந்து பேர் பலி! மூவர் கவலைக்கிடம்

Report Print Raju Raju in பிரான்ஸ்
291Shares
291Shares
Seylon Bank Promotion

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி தீப்பிடித்ததில் உள்ளிருந்த 5 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கிழக்கு பிரான்ஸின் Mulhouse நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

குடியிருப்பின் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டுக்குள் இருந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஐந்து பேரில் மூவர் துருக்கியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 20 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்ட நிலையில் காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

குறித்த கட்டிடமானது நல்ல நிலையில் இருந்துள்ளது. தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இந்த சம்பவம் பயங்கரமானது எனவும் இதனால் முழு நகரமும் அதிர்ந்துள்ளது எனவும் நகர மேயர் ஜீன் ராட்னர் கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்