கதலோனிய நெருக்கடி: ஐரோப்பிய ஒன்றியம் மத்தியஸ்தம் வகிக்காது - பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Thayalan Thayalan in பிரான்ஸ்

ஸ்பெய்னுக்கும் கதலோனியாவுக்கும் இடையில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், மத்தியஸ்தம் வகிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் முன்வராது என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரொன் தெரிவித்துள்ளார்.

பிராங்புரூட் பல்கலைக்கழகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, கதலோனியாவின் நெருக்கடி விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியமோ, பிரான்ஸோ, ஜேர்மனியோ அல்லது ஏனைய நாடுகளோ ஏன் தலையிட வேண்டும். அது அந்நாட்டின் உள்விவகாரமாகும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

எனவே, கதலோனிய நெருக்கடி விவகாரத்தில் நாம் தலையிட்டால், அது ஸ்பெய்னின் உள்விவகாரங்களில் நாம் தலையிடுவது போன்றதாகிவிடும். இது அநாகரீகமானது’ எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers