பிரான்ஸை உலுக்கிய சிறுமி மாயமான வழக்கில் அதிரடி திருப்பம்: முன்னாள் ராணுவ வீரர் கைது

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் ஆல்ப்ஸ் பகுதியில் திருமணத்தின்போது மாயமான 8 வயது சிறுமியை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் ஆல்ப்ஸ் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த திருமண விழாவில் இருந்து 8 வயது சிறுமி Maelys de Araujo திடீரென மாயமானார்.

இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்ட பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் 34 வயதான முன்னாள் ராணுவர் வீரர் Nordahl Lelandais என்பவரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

இதில் அவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியை புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து எஞ்சிய உடல் பாகங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் மற்றும் நோக்கம் குறித்து மேலதிக விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்