பிரான்ஸ் தனது மன்னரின் தலையை வெட்டிய நாடு: எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
361Shares
361Shares
ibctamil.com

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி François Hollande , பிரான்ஸ் தனது மன்னர்களின் தலையை வெட்டும் நாடு என்பதை மறந்துவிட வேண்டாம் என எச்சரிக்கும் தொனியில் தனது புதிய புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தனது புதிய புத்தகமாகிய Lessons of Power என்னும் புத்தகத்தில் அவர், தான் பாடுபட்டதன் பலனை தற்போது அனுபவிப்பதாகக் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் தனது பதவிக் காலத்தில் தான் தவறுகள் செய்துள்ளதாகவும் அதனாலேயே வரலாற்றிலேயே பிரபலமாகாத பிரெஞ்சுப் பிரதமராக இருப்பதாகவும் அதன் காரணமாகவே கடந்த ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாடு மன்னராட்சிக்காக ஏக்கம் கொண்டிருப்பதாகவும், மன்னரை இழந்தது நாட்டில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாகவும் 2015 ஆம் ஆண்டு Macron தெரிவித்திருந்தார்.

“அவர் கூறியது பொருத்தமானதுதான், காரணம் அவர் ஆட்சி செய்யும் விதமும் ஒரு மன்னர் ஆட்சி செய்வதுபோலத்தான் இருக்கிறது” என்று கூறியுள்ள François,

”மக்கள் ஒரு மன்னரை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறுபவர்கள், அவர்கள் தங்கள் மன்னரின் தலையை வெட்டிய ஒரு நாட்டில் வாழ்கிறார்கள் என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களுடம் ஜனாதிபதிக்கு தொடர்பிலிருப்பதில்லை, அவர் செல்வந்தர்களுக்கே சாதகமாக செயல்படுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முன்னெப்போதும் நடந்திராத வகையில் ஒரு சிறிய கிராமத்திலிருந்து, இனி அவர் பிரான்ஸ் நாட்டு ஓய்வுதியதாரர்கள், உழைப்பாளர்கள் மற்றும் கிராமத்தினருடன் மீண்டும் தொடர்பிலிருக்க விரும்புவதாக பேட்டி ஒன்றை Macron அளித்ததற்கு அடுத்த நாள் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று பிரான்ஸ் ஜனாதிபதி சபைக்கும் நாட்டுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது சரி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியதை அடித்து கடும் விமர்சனங்களுக்குள்ளானார்.

1905 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின்படி பிரான்ஸ் நாடு சபைக்கும் நாட்டுக்கும் இடையே உறவு எதுவும் இருக்கக் கூடாது என்பதைக் கடுமையாக பின்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்