பிரான்சில் குழந்தையை காப்பாற்றிய ஹீரோவுக்கு அமெரிக்காவில் கிடைக்கவுள்ள கெளரவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் அடுக்கு மாடி குடியிருப்பில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு அமெரிக்காவில் விருது வழங்கப்படவுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுக்கு மாடி குடியிருப்பில் தொங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை காஸ்மா என்ற அகதி இளைஞர் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றினார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதால், சம்பவத்தைக் கண்ட பிரான்ஸ் ஜனாதிபதி அந்த அகதி இளைஞனுக்கு பிரான்ஸ் குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்தார்.

அதுமட்டுமின்றி அவருக்கு தீயணைப்பு துறையிலும் வேலை கொடுக்கப்பட்டது.

ஒரே நாளில் பிரான்ஸ் மக்களிடம் ஹீரோவான காஸ்மாவை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்சில் இன்று நடைபெறும் விருது வழங்கும் விழாவில் அவருக்கு BET humanitarian என்ற விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers