பெல்ஜியம் அணியின் உலகக்கிண்ண கனவை உடைத்த பிரான்ஸ்: ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த செயல்

Report Print Santhan in பிரான்ஸ்
343Shares
343Shares
lankasrimarket.com

பெல்ஜியம் அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்நாட்டு ரசிகர்கள் பிரான்ஸ் மக்களுக்கு எதிரான வன்முறையில் இறங்கினர்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதின.

இப்போட்டியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு பெல்ஜியம் அணி முன்னேறிவிடும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பெல்ஜியம் அணியின் தோல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால் பெல்ஜியத்தில் வசிக்கும் பிரான்ஸ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்தன.

குறிப்பாக பெல்ஜியத்தின் Herseaux பகுதி உட்பட பல பகுதிகளில் பிரான்ஸ் நாட்டின் நம்பர் பிளேட் கொண்ட கார்களை எரித்து நாசமாக்கினர்.

தற்போது வரை கிடைத்த தகவல் படி பிரான்ஸ் நம்பர் பிளேட் கொண்ட ஏழு கார்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும், இது தொடர்பாக பொலிசார் சிலரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்