பிரான்சில் மாதவிடாய்க்கு அதிக செலவு செய்யும் பெண்கள்! மாணவிகளுக்கு இலவசம் என மகிழ்ச்சி தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் சுகாதாரமான பொருட்கள் மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

Ifop என்ற நிறுவனம், கடந்த மார்ச் 4 ஆம் திகதி திங்கட்கிழமை, 12-19 வயதுக்குட்பட்ட 1,653 பெண்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

அதில் 97 சதவீதமான பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருட்களுக்காக மிக அதிகமாக செலவு செய்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் முதல் கட்டமாக பிரான்ஸ் தலைநகர் பரிசின் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள பள்ளி ஒன்று மாணவிகளுக்கு இப்பொருட்களை இலவசமாக வழங்குவதாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பத்தாம் வட்டார நகர முதல்வர் Alexandra Cordebard இது குறித்து தெரிவிக்கும் போதும், பத்தாம் வட்டாரத்தில் ஆறு உயர்கல்வி பள்ளிகள் உள்ளது.

இவை அனைத்திலும் கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் இலவச மாதவிடாய் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி ஆண்டில் இருந்து இந்த வசதிகள் வழங்கப்படும். தவிர, விரைவில் பரிஸ் முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கும் இந்த வசதி கொண்டுவரப்பட உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers