Brexit: ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட்டை எச்சரிக்கையுடன் வரவேற்கும் பிரான்சில் வசிக்கும் பிரித்தானியர்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேறினால் பிரித்தானியர்களுக்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்படும் என்பது குறித்து பிரான்ஸ் வெளியிட்டுள்ள புதிய அரசாணையை பிரான்சில் வசிக்கும் பிரித்தானியர்களின் உரிமைகள் குழு ஒன்று சற்று எச்சரிக்கையுடனேயே வரவேற்றுள்ளது.

ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேறினால் பிரான்சில் வசிக்கும் பிரித்தானியர்கள், தொடர்ந்து வசிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்களை முதன்முறையாக பிரான்ஸ் அரசாங்கம் நேற்று வெளியிட்டது.

வேலையிலிருப்போர், சுய தொழில் செய்வோர் மற்றும் குடும்பங்கள் என வெவ்வேறு பிரிவினர் என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே பிரான்சில் வசிக்கும் பிரித்தானியர்களுக்கு அந்த விவரங்களில் ஏராளமான நல்ல செய்திகள் இருப்பதாக அந்த குடிமக்கள் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சில விடயங்கள் தெளிவாக இல்லை என்றும் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, முன்பு நீங்கள் சரியான மற்றும் நல்ல வருவாய் தரக்கூடிய ஒரு வேலையை செய்கிறீர்கள் என்பதை காட்டினால் போதும், ஆனால், இப்போது உங்களுக்கு குறிப்பிட்ட அளவு வருவாய் வருவதற்கான வழிவகை உள்ளதை நீங்கள் காட்டியாக வேண்டும்.

உடற்குறைபாடு உடையோருக்கான உதவித்தொகை பெறுவோர் உங்களுக்கு போதுமான வருவாய் வருவதற்கான வழி உள்ளதை நிரூபிக்க வேண்டியதில்லை.

என்றாலும் அந்த அரசாணையில் ஒரு விடயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும், உங்களுக்கு போதுமான வருவாய் இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்வதா அல்லது உங்களுக்கு

ஏற்கனவே ஐந்தாண்டுகள் போதுமான வருவாய் இருந்திருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்வதா என்பதுதான் அது.

இந்த நிபந்தனைகள், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நாளில் பிரான்சில் சட்டப்படி வசிப்போருக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers