பிரான்ஸ் எல்லையில் சவப்பெட்டியுடன் சிக்கிய இருவர்: உள்ளே இருந்தது என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

போலந்து நாட்டைச் சேர்ந்த இருவர் சுங்க சோதனையின்போது சவப்பெட்டிக்குள் அகதி ஒருவரை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் எல்லையில் லொறி ஒன்றை சுங்க அதிகாரிகள் மடக்கி லொறியினுள் என்ன இருக்கிறது என்று கேட்ட போது, லொறியில் வந்த இருவர் பிரித்தானியாவுக்கு சவப்பெட்டிகளைக் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

சுங்க அதிகாரிகள் சவப்பெட்டிகளை சோதிக்கும்போது தற்செயலாக ஒரு பெட்டிக்குள் ஒருவர் உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

அவரை விசாரித்தபோது அவர் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் பிரித்தானியாவுக்கு திருட்டுத்தனமாக செல்ல முயல்வதும் தெரியவந்தது.

அந்த போலந்து நாட்டவர்கள் இருவரும் அந்த நபர் சவப்பெட்டிக்குள் எப்படி வந்தார் என்பது தங்களுக்கு தெரியாது என்று கூரியுள்ளனர்.

ஆனால் ஓடும் லொறியில், ஓட்டுநரின் உதவியில்லாமல் அந்த சவப்பெட்டிக்குள் ஒருவர் ஏறி படுத்திருக்க முடியாது என்று பொலிசார் தெரிவித்தனர்.

அந்த போலந்து நாட்டவர்கள் இருவரும், அந்நிய நாட்டவர் ஒருவரை முறைகேடாக, தகுதியற்ற நிலையிலான போக்குவரத்து மூலமாக கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டு பிரான்சில் 14 மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்..

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers