உலகின் மிக இனிமையான நகரங்கள் பட்டியல் வெளியீடு... தலைநகர் பாரிசுக்கு எத்தனாவது இடம் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

உலகின் மிகவும் இனிமையான நகரங்களின் பட்டியலில் தலைநகர் பிரான்ஸிற்கு 25-வது இடம் கிடைத்துள்ளது.

நகரங்களின் அமைதியான சூழல், விலைவாசி, பொருளாதாரம், குற்றம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், சுற்றுலாப்பயணிகளுக்கான பாதுகாப்பு என மொத்தம் 140 காரணங்களின் அடிப்படையில் இந்த நகரங்களின் பட்டியலை The Economist பத்திரிகையின் Economist Intelligence Unit வெளியிட்டுள்ளது.

இதில் பிரான்ஸ் இந்த ஆண்டு 25-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு முன்னால் இருந்த பாரிஸ் இந்த ஆண்டு பின்னோக்கி சென்றதற்கு முக்கிய காரணம், மஞ்சள் மேலங்கி போராட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் மேலங்கி போராளிகள் கடந்த பத்து மாத காலமாக மேற்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டம் சகல துறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

அவுஸ்திரேலியாவின் Vienna, Melbourne மற்றும் Sydney ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்