மயக்கமான நிலையில்... குளிரூட்டப்பட்ட லொரியில் சிக்கிய மேலும் ஒரு கும்பல்: பிரான்ஸ் எல்லையில் சம்பவம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் குளிரூட்டப்பட்ட லொரியில் இருந்து மிகவும் ஆபத்தான நிலையில் மேலும் ஒரு கும்பல் பொலிசாரிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கியவர்களில் பாதி பேர் சிறார்கள் எனவும், இருவர் கைக்குழந்தைகள் எனவும், அந்த 8 பேரும் ஆப்கான் நாட்டவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ருமேனிய நாட்டு லொரி சாரதிகள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 5 மணியளவில் Calais பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரித்தானியாவுக்கு Calais பகுதியில் இருந்து படகு ஒன்று புறப்படும் நேரம் கணக்கிட்டு, குறித்த சாரதிகள் லொரியுடன் விரைவதை அறிந்த பொலிசாரே தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதில் சிறார்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் 8 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் எசெக்ஸ் நகரில் லொரியுடன் 39 சடலங்கள் சிக்கிய நிலையிலேயே, தற்போது Calais பகுதியில் 8 ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் சிக்கியுள்ளனர்.

குளிரூட்டப்பட்ட அந்த லொரியில் 8 பேரும் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இன்னும் சில மணி நேரம் கடந்திருந்தால் எசெக்ஸ் நகரில் சடலங்களாக மீட்கப்பட்டது போன்று Calais பகுதியிலும் 8 சடலங்களை மீட்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.

(Image: Getty)

மீட்கப்பட்ட அனைவரையும் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பிரித்தானியாவுக்கு செல்லும் படகில் அவர்களை அனுப்பி வைக்கவே லொரியுடன் அந்த இரு சாரதியும் முயன்றதாக கூறப்படுகிறது.

தற்போது கைதாகியுள்ள இரு ருமேனியா சாரதிகள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அறியவந்த பிரித்தானிய எல்லைப் படையே தகவல் தெரிவித்துள்ளது.

பின்னர் பிரான்ஸ் அதிகாரிகள் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் 8 பேரையும் மீட்கும் போது அந்த லொரியின் வெப்பநிலை சுமார் 7C என கூறப்படுகிறது.

தற்போது அந்த லொரி எங்கிருந்து பயணத்தை துவங்கியது உள்ளிட்ட தகவல்களை திரட்டும் பணி துவக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்