பிரான்சில் நடு ரோட்டில் தீயிட்டு கொழுத்தி கொண்ட மாணவன்... உயிர் பிழைப்பது கடினம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மாணவன் நடு வீதியில் தன்னைத் தானே தீயிட்டு கொழுத்தி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Lyon நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் உள்ளூர் நேரப்படி 3.00 மணியளவில் வீதியில் பெட்ரோலுடன் வந்த 22 வயது இளைஞன் திடீரென்று தன் மீது பெட்ரோலை ஊற்றி தீயை பற்றவைத்துக் கொண்டான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக இது குறித்து தீயணைப்பு படையினரை அழைத்துள்ளனர்.

அதன் பின் உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், மாணவனின் உடல் 90 வீதம் தீயில் கருகியுள்ளதாகவும், உயிர் பிழைப்பது கடினம் என் தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் மாணவனின் குடியுரிமை தொடர்பான விபரங்கள் வெளியிடவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்