கொரோனா வைரஸ் தொடர்பில் இன்று இரவு பிரான்சில் ஒலிக்க இருக்கும் ஆலய மணிகள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
1111Shares

கொரோனா வைரஸ் தொடர்பில் இன்று இரவு 7.30 மணிக்கு பிரான்ஸ் முழுவதிலும் உள்ள ஆலய மணிகள் அனைத்தும் ஒலிக்க இருக்கின்றன.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள், அவர்களது அன்பிற்குரியவர்கள், மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பவர்கள் என் அனைவரையும் நினைவுகூறும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கோள்ளப்படுவதாக பிரான்ஸ் கத்தோலிக்க பிஷப்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் பத்து நிமிடங்களுக்கு மணி ஒலிக்கும் நேரத்தில், மக்கள் தங்கள் வீடுகளில் ஜன்னலில் மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து, மக்கள் தேவாலயங்களுக்கு வருவது தடைபட்டுள்ளதால், தாங்கள் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதற்கு அடையாளமாகவும் இந்த ஆலய மணிகள் ஒலிக்க உள்ளன.

connexionfrance

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்