பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படும் நிலையில் சற்று மாறுபடும் பாரீஸ்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த தயாராகும் நிலையிலும், அதிகாரிகள் பாரீஸைக் குறித்து கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறார்கள்.

பாரீஸில் கொரோனா பரவுமோ அன்று அஞ்சும் அதிகாரிகள், மிகவும் குறைவாகத்தான் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த இருக்கிறார்கள்.

மார்ச் மாத மையத்தில் பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆகியவை குறையத்தொடங்கியுள்ளதையடுத்து, வரும் திங்கட்கிழமையிலிருந்து கட்டுப்பாடுகளை நெகிழ்த்த திட்டமிட்டுள்ளது நாடு.

ஆனால், இன்னமும் பாரீஸைச் சுற்றியுள்ள Ile-de-France பகுதி, Hauts-de-France, Grand Est மற்றும் Bourgogne-Franche-Comte ஆகிய பகுதிகள் சிவப்பு பகுதிகளாகவே நீடிக்கின்றன.

ஆகவே சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டாலும், பாரீஸில் பெரிய ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜூன் மாதம் 2ஆம் திகதி அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்யப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரான்ஸ் பிரதமர், நிலைமை முன்னேறினால் பிரான்ஸ் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும், மோசமான விளைவுகள் ஏற்பட்டால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்