பிரான்ஸ் தலைநகரில் அனைத்து மெட்ரோ சேவைகளும் எப்போது பழைய நிலைக்கு திரும்பும்? முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அனைத்து மெட்ரோ சேவைகளும் இயங்குவது குறித்து RATP நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் மெட்ரோ போக்குவரத்துக்கு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு கொஞ்சம், கொஞ்சமாக ஒரு சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டு வருகிறது.

அதன் படி, மெட்ரோ சேவைகளும் மெல்ல மெல்ல தங்களுடைய போக்குவரத்துக்களை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், தற்போது உள்ளிருப்புக் காலம் முடிவடைந்ததை அடுத்து, பரிசில் வரும் 22-ஆம் திகதி முதல் அனைத்து மெட்ரோ சேவைகளும் வழக்கம் போல் இயங்கும் என்று RATP நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிகாலை 5.30 தொடக்கம் நள்ளிரவு 1.15 வரை இந்த சேவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்