கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பிரான்சை மீட்க 100 பில்லியன் யூரோக்கள் செலவில் பிரமாண்ட திட்டம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
1669Shares

பிரான்சில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதற்காக 100 பில்லியன் யூரோக்கள் செலவில் பிரமாண்ட திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது.

’France re-launch’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த திட்டம், வேலையில்லாத்திண்டாட்டத்தை ஒழிப்பதுடன், தொழில்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்க இருக்கிறது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் பிரான்சின் பொருளாதாரம் 13.8 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் இதுதான் மிகப்பெரும் காலாண்டு பொருளாதார வீழ்ச்சியாக கருதப்படுகிறது.

100 பில்லியன் யூரோக்கள் செலவிலான இந்த திட்டத்தை பிரான்ஸ் பிரதமர் Jean Castex வெளியிட்டுள்ளார்.

GETTY IMAGES

இந்த திட்டத்தின் நோக்கம், கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக வழங்கப்பட்ட தற்காலிக நிதியுதவியிலிருந்து அகன்று, பணி மற்றும் பயிற்சி வழங்கலில் நீண்ட கால முதலீடு செய்வதுடன், பசுமை பொருளாதாரத்துக்கு பிரான்சை மாற்றுவதுமாகும்.

பொருளாதாரத்தை மேம்படுத்த 35 பில்லியன் யூரோக்கள், பசுமை ஆற்றல் கொள்கைகளுக்கு ஒரு 30 பில்லியன் யூரோக்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் வீடுகளை பாதுகாப்பானவையாக மாற்ற ஒரு 6 பில்லியன், ஹைட்ரஜன் தொழில்துறைக்கு ஒரு 2 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்வது என திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள முதலீட்டுத் தொகை, வேலைகளுக்கு ஆதரவளித்தல், பயிற்சி மற்றும் 160,000 பணியிடங்களை பெரும் சமூக முன்னெடுப்புகள் மூலம் உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுக்காக செலவிடப்படும்.

அடுத்த இரண்டாண்டுகளில் இந்த தொகை செலவிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் Jean Castex, இந்த முதலீடு, 2022வாக்கில் பொருளாதாரத்தை கொரோனாவுக்கு முன்னிருந்த நிலைக்கு கொண்டு வரும் என நம்புவதாக தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்