ஈயை கொல்வதற்காக வீட்டையே எரித்த தாத்தா.. பிரான்ஸில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்

Report Print Kavitha in பிரான்ஸ்

பிரான்ஸில் 80 வயதான முதியவர் ஒருவர் ஈயை அடித்துக் கொல்லும் முயற்சியில் தனது வீட்டின் ஒரு பகுதியை எரித்துள்ள சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பார்கோ -செர்னோ எனும் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் இரவு நேர உணவை உண்ண சென்ற போது அவரைச்சுற்றி ஈ ஒன்று பறந்து ரீங்காரமிட்டு கொண்டு இருந்துள்ளது.

இந்த சத்தம் அவருக்கு எரிச்சலுட்டிய நிலையில் அவருக்கு கோபம் ஏற்பட்டு பூச்சிகளைக் கொல்லும் மின்சார பேட் ஒன்றின் மூலம் அதனை கொல்லலாம் என்று அவர் முடிவு செய்தார்.

இந்நிலையில் அந்த சமயத்தில் அவரது வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனை அறியாத அந்த முதியவர் மின்சார பேட்டை பயன்படுத்த தொடங்கிய போது அந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியதில் வீட்டின் மேல் கூரை கணிசமான அளவில் சேதமடைந்துள்ளதுடன் சமையலறை முற்றிலும் தீயில் கருகி போனது.

மேலும் அந்த முதியவர் கையில் தீக்காயங்களுடன் உயிர் தப்பி விட்டார் என்றும் இவரை அந்த ஊரிலேயே வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்