பிரான்சின் முன்னாள் ஜனதிபதி மருத்துவமனையில் அனுமதி! தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
353Shares

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி Valéry Giscard-d'Estaing உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1974 ஆம் ஆண்டில் இருந்து 1981 ஆம் ஆண்டு வரை பிரான்சின் ஜனாதிபதியாக Valéry Giscard-d'Estaing இருந்து வந்தார்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இன்று பரிசில் உள்ள Georges-Pompidou மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் Valéry Giscard-d'Estaing அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு நுரையீரலில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்