பிரான்சில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை தொட்ட கொரோனா! கவலையளிக்கும் தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் தொற்றாக பதிவாகி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், பிரான்சில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

பொது சுகாதாரத் துறை (Santé Publique France ) வெளியிட்ட தகவல்களின் படி, நேற்று ஒரே நாளில் 20,339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிள்ளது.

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிகமாக 18 ஆயிரம் என்று தொட்டிருந்தது. இதற்கு முன்னதாக பிரான்சில் ஒரே நாளில் 20000 பேர் பாதிக்கப்பட்டிருந்ததே அதிகமாக இருந்தது.

தற்போது நேற்று மட்டும் ஒரே நாளில் 20,339-ஆக பதிவாகியுள்ளதால், முன்பு எப்போதும் இல்லாத வகையில் பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதனால், மொத்தமாக பிரான்சில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 691,977-ஐ எட்டியுள்ளது. விரைவில் இது 700,000 எனும் புதிய எல்லையை தொடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர், மொத்தமாக இதுவரை 32,630 பேர் பலியாகியுள்ளனர்.

பிரான்சில் தொற்று வீதம், கவலையளிக்கும் விதமாக 10.4 சதவீதத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது,

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்