ஒரே நாளில் உச்சம் பெற்ற பாதிப்பு: பிரான்சில் ஊரடங்கை கண்காணிக்க 12,000 பொலிசார்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் கடந்த ஒரு நாளில் மட்டும் புதிதாக 30,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரான்சில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, கட்டுக்குள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் அறிவித்திருந்தாலும்,

தற்போது சனிக்கிழமை முதல் சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்து உத்தரவு வெளியாகியுள்ளது.

பிரெஞ்சு சுகாதார ஆணையம் வியாழக்கிழமை மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் சுமார் 30,621 பேர்களுக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பரவலாக கொரோனா பரொசோதனைகளை முன்னெடுக்கப்படு வரும் நிலையில், ஒரே நாளில் உச்சம் பெற்ற பாதிப்பு பதிவாகியுள்ளது.

மேலும், 1200 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 67 மில்லியன் மக்கள் வசிக்கும் பிரான்சில், கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இதுவரை 33,125 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை முதல் ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்படுவதால், தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.

மேலும், நாடு முழுவதும் தனிப்பட்ட கொண்டாட்டங்கள், திருமண விருந்து நிகழ்ச்சிகள் என எதுவும் நடைபெற அனுமதி இல்லை.

ஊரடங்கை கண்காணிக்கும் பொருட்டு மாநகரங்களில் 12,000 பொலிஸ் அதிகாரிகளை களமிறக்கியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்