அகதிகள் தொடர்பில் முக்கிய ஒப்பந்தம்... பிரான்சும் பிரித்தானியாவும் கையெழுத்திட்டன

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
1009Shares

அகதிகள் முறையான ஆவணங்களின்றி ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் பிரான்சும் பிரித்தானியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இது தொடர்பாக பேசிய பிரித்தானியாவின் உள்துறைச்செயலரான பிரீத்தி பட்டேல், சனிக்கிழமையன்று கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரான்ஸ் கடற்கரைகளில் ரோந்து செல்லும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளதுடன், ட்ரோன்கள், ராடார்கள் முதலிய கருவிகளின் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயை கடந்து இங்கிலாந்துக்குள் நுழைய முயலும்போது பிடிபட்டார்கள். சிலர் படகு கவிழ்ந்து இறந்தும் போனார்கள்.

இனி இப்படி ஒரு பாதையே இருக்கக்கூடாது என விரும்புவதாக பட்டேலும், பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmaninம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்