இது ஆபத்தின் அறிகுறி! தடுக்காவிட்டால் பிரான்ஸை கடுமையாக தாக்கும்: விளைவுகள் மோசமாகும் என எச்சரிக்கை

Report Print Santhan in பிரான்ஸ்
439Shares

பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது கொரோனாவின் மூன்றாவது அலையை உருவாக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், உலகின் சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த புதிய வகை வைரஸ் தீவிரமாக பரவக் கூடியது என்பதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரான்சில் பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரான்சின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனமான Inserm (Institut national de la santé et de la recherche médicale) கொரோனா விஷயத்தில் எச்சரித்துள்ளது.

பிரான்சில் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதுடன், பிரித்தானிய வைரசான VoC 202012/01-ன் தொற்று பிரான்சில் அதிகரிப்பதும் பெரும் ஆபத்தின் அறிகுறி என inserm தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வைரசின் அதிகரிப்பு பிரான்சில் மிக மோசமான மூன்றாவது அலையை உருவாக்க உள்ளதெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு ஏற்பட்டுத்தப்பட்டு, தொற்றுச் சங்கிலி(ஒருவருக்கு ஒருவர் பரவுவதை) தடுக்காவிட்டால், தற்போதுள்ள கொரோனா வைரசை விட, 70 சதவீதம் அதிகத் தொற்றுள்ள பிரித்தானிய வைரசால், இரண்டு மாதங்களிற்குள் மருத்துவமனைகள் நிரம்பிவிடும் ஆபத்தும், நான்கு மடங்கான நோயாளிகள் உருவாகும் நிலையும், மிக மோசமான விளைவுகளும் ஏற்படும் என்று பிரான்சின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதற்கு பிரித்தானியாவின் இன்றைய மோசமான நிலைமையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகளே சான்று என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்