விளையாட்டு மைதானத்தில் மறைந்திருந்த ராட்சத வடிவிலான ஸ்வஸ்திகா சின்னம்

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் விளையாட்டு மைதானம் ஒன்றில் நிலம் தோண்டப்பட்டபோது ராட்சத வடிவிலான ஸ்வஸ்திகா முத்திரை கிடைத்துள்ளது.

ஹம்பர்க் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில், புதிய உடைமாற்றும் அறைகள் கட்டுவதற்காக குழிகள் தோண்டப்பட்டது.

அப்போது இயந்திரத்தில் ஏதோ திடப்பொருள் ஒன்று தட்டுபட்டுள்ளது, பிறகு தான் தெரிந்தது அது ஸ்வஸ்திகா முத்திரை சின்னம் என்று, அந்த முத்திரை பல ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

40 சென்டிமீட்டர் அளவில், கான்கிரீட்டால் உருவாக்கப்பட்டிருந்தால் அதனை நகர்த்த முடியவில்லை.

எனினும் விளையாட்டுகள் வழக்கம் போல நடைபெறும் என்றும், ஸ்வஸ்திகா முத்திரை விரைவில் அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்